An Interview with - SUGA Employment Services CEO - Mr.N.Sugavanam - in Tamil



இன்று இந்தியாவில் பத்து கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.  இது போன்று வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு சிறந்த புகலிடமாக விளங்கி வேலை வாய்ப்பை பெற்று தரும் 'சுகா எம்ப்ளாய்மென்ட் சர்விசெஸ்' ( SUGA Employment Services) நிறுவனத்தை பற்றி கேள்விப்பட்டு அவர்கள் அலுவலகத்திற்கு சென்று அதன் சி.ஈ.ஒ. திரு சுகவனம் (Mr. N.Sugavanam, CEO - Chief Executive Officer) அவர்களை சந்தித்து அவர்களது நிறுவன சேவைகளை பற்றி சில கேள்விகளை நமது வாசகர்களுக்காக கேட்டோம்.

கேள்வி: இன்று இந்தியாவில் வேலை இல்லாத திண்டாட்டம் உள்ளதா? 

இன்று இந்தியாவில் பல்வேறு வேலை வாய்ப்புகள் பல்கி பெருகி வருகின்றன.  இன்று இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.ஆனால் அந்த வேலைகளில் பணி புரிய சிறந்த ஊழியர்கள் கிடைப்பதில்லை.

எங்கள் நிறுவனத்துடன் இணைந்து நூற்றி இருபதிற்கும் (120+) மேற்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை எங்கள் மூலமாக தேர்வு செய்து கொள்கிறார்கள்.

எங்கள் வாடிக்கையாளர்கள் நிறுவனங்களில் தற்போது சுமார் மூவாயிரம் (3000) காலி இடங்கள் உள்ளன. ஆனால் அதற்கு தகுந்த வேலையாட்கள் இன்னும் கிடைக்கவில்லை.

மேலும் தற்போது பல இளைஞர்கள் தங்களது அடிப்படை திறமைகளை திறம்பட வளர்த்து கொள்வதில்லை.  அதனால்தான் அவர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை.